சமூகத்தின் எதிர்காலத் தூண்களாகவும், அன்பையும் ஒழுக்கத்தையும் கற்க வேண்டிய இளம் வயதிலும் சிறுவர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள வன்முறை மனநிலை, உலகத்தையே உலுக்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவமாக அரங்கேறியுள்ளது.
14 வயதே நிரம்பிய பள்ளி மாணவன் ஒருவன், பெற்ற தாய்க்குச் சமமான தனது ஆச்சி மற்றும் தாத்தாவை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தான் படிக்கும் பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த மனிதநேயமற்ற தாக்குதலில் 5 ஆசிரியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு, செய்தி அறிந்த அனைவரது நெஞ்சையும் நடுங்க வைத்துள்ளது. தன் வீட்டிலேயே தொடங்கிய அந்த சிறுவனின் கொடூர வெறி ஆட்டம், அவர் பயின்ற பள்ளி வளாகம் வரை நீண்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த அந்த மாணவன், தனக்குக் பாடம் கற்பித்த ஆசிரியர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளான்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறியடித்து ஓடிய மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் அலறல் சத்தத்தால் அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்துள்ளது. தன் கைப்பட வளர்த்த தாத்தா-பாட்டியையும், தனக்கு நல்வழி காட்டிய ஆசிரியர்களையும் ஒரே நாளில் குருதி வெள்ளத்தில் மிதக்க வைத்த அந்தச் சிறுவனின் அரக்கத்தனமான செயல், மனிதநேயத்தின் மீதே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்தச் சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் எதற்காக இதுபோன்ற கொடூரமான முடிவை எடுத்தான், துப்பாக்கி அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இணையவழிக் கலாச்சாரம், வன்முறை விளையாட்டுகள் மற்றும் கவனிக்கப்படாத உளவியல் சிக்கல்கள் ஆகியவை பிஞ்சு மனங்களில் எத்தகைய ஆபத்தான நஞ்சை விதைக்கின்றன என்பதை இந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் உலகிற்கு ஒரு கடுமையான எச்சரிக்கை மணியாக உணர்த்தியுள்ளது.
