வரவிருக்கும் ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் எல்லைப் பகுதிகளில் தேசத்தைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்காகத் தங்கள் சொந்தக் கைகளாலேயே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ராக்கிகளைப் பள்ளி மாணவர்கள் தயாரித்து அனுப்பும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒன்று திரண்டு, இந்த பிரம்மாண்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பண்டிகைக் காலங்களில் குடும்பத்தைப் பிரிந்து நாட்டின் எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரர்களுக்குத் தங்களது நன்றி, மரியாதை மற்றும் தேச ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக மாணவர்கள் இத்தனை ராக்கிகளையும் தங்களது சொந்தக் கைகளாலேயே உருவாக்கியுள்ளனர்.
नागपुर, महाराष्ट्र में छात्रों ने सीमा पर तैनात भारतीय जवानों के लिए 3 लाख से ज्यादा राखियां तैयार की हैं। राखियों के जरिए छात्रों ने देश की रक्षा में जुटे वीर जवानों के प्रति अपना सम्मान, प्रेम और आभार व्यक्त किया।#Nagpur #Maharashtra #RakshaBandhan #IndianArmy #IndianSoldiers… pic.twitter.com/uEJ2lWUKnX
— InKhabar (@Inkhabar) August 7, 2026
நாட்டிற்காகச் சேவை செய்யும் வீரர்களுக்குப் பள்ளி மாணவர்கள் தங்களின் பாசத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் செய்துள்ள இந்தச் செயல், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
