2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றிக் கொடுத்து, அதிமுகவில் அசைக்க முடியாத ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்தவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தென்மாவட்ட அதிமுகவின் முக்கியக் தூண்களில் ஒருவராக விளங்கியவர்.
ஆனால், அதற்குப் பிறகு நடந்த 2021 மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், ‘இனி இரட்டை இலைச் சின்னத்துடன் பயணிப்பதில் எந்தப் பயனும் இல்லை’ என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, திமுக பக்கம் தாவுவதற்காகத் தீவிரமாகக் காய்நகர்த்தி வருவதாகக் தகவல்கள் கசிந்துள்ளன.
அதேவேளையில், விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் KKSSR ராமச்சந்திரனுக்குப் பிறகு, கட்சியை முழுமையாகக் கட்டுக்கோப்பாகக் கொண்டு செல்லக்கூடிய ஒரு வலுவான மாஸ் தலைவர் தேவைப்படுவதால், திமுக தலைமையும் ராஜேந்திர பாலாஜியைச் சேர்த்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறதாம்.
ராஜேந்திர பாலாஜியின் இந்த ரகசியத் திட்டம் மற்றும் திமுகவின் கிரீன் சிக்னல் காரணமாக, விருதுநகர் மாவட்ட அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பும் காரசாரமான விவாதங்களும் கிளம்பியுள்ளன.
