ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற மாணவர்களின் தொடர் போராட்டம் குறித்துச் செய்தியாளர் எழுப்பிய நேரடியான கேள்விக்குப் பதில் அளிக்காமல், ராகுல் காந்தி மௌனம் காத்துவிட்டு வேறு தலைப்பிற்கு மாறிய சம்பவம் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கும் போராட்டங்களுக்கும் உடனடியாகக் குரல் கொடுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எழும் மக்களின் குறைகளைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

“>

 

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவும் பொதுவான பிரச்சினைகளுக்குச் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தரப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.