உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கங்கனாவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற பெண்களிடம் இருந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த உ.பி. காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் பொம்மையின் ஒரு பகுதியைப் பிடுங்கிச் சாலை முழுவதும் ஓடிய சுவாரசியமான மற்றும் பரபரப்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
நாட்டின் இளம் தலைமுறையினரையும் பெண்களையும் அவமதிக்கும் வகையில் கங்கனா ரணாவத் பேசியதாகக் குற்றம்சாட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டியின் பெண் நிர்வாகிகளும் தொண்டர்களும் லக்னோவில் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் மகள்களைத் தரக்குறைவாகச் சித்தரித்த அவரை கண்டித்து உருவபொம்மை எரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் பொம்மையைச் கொளுத்த முயன்ற கண நேரத்தில், அங்கே பாய்ந்து வந்த இன்ஸ்பெக்டர் மிகவும் சாமர்த்தியமாக அதன் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினார்.
Uttar Pradesh कांग्रेस कमेटी की महिला पदाधिकारियों और कार्यकर्ताओं ने लखनऊ में भाजपा सांसद कंगना रनौत का पुतला फूंकने की कोशिश की. तभी यूपी पुलिस के एक इंस्पेक्टर ने पुतले का एक हिस्सा छीन लिया और उसे लेकर भाग गए. इसका एक वीडियो भी सामने आया है.
कांग्रेस कमेटी की महिलाओं… pic.twitter.com/LGq8aRYAZx
— News Pinch (@TheNewspinch) July 29, 2026
“>
இதனால் காங்கிரஸ் பெண்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுவெளியில் பாஜக எம்பிக்கு எதிரான போராட்டமும், அதைக் கட்டுப்படுத்த காவல்துறை செய்த ஃபன்னி மற்றும் அதிரடிச் செயலும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
