தமிழகத்தில் நீட் தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக மற்றும் தவெக கட்சிகள் தொடர்ந்து கோரி வருவது அவற்றின் சொந்த அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளர் பி. சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் தங்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகள் குறித்து மாணவர்களே நேரடியாகத் தன்னிடம் பகிர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் ஓட்டு வங்கி அரசியலின் மூலமே பார்க்கக் கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பி. சுதாகர் ரெட்டி, நீட் தேர்வு முறை மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ள நேர்மறையான மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.

தேர்வு முறை குறித்து மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், மாநிலத்தின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மட்டுமே தலைவர்கள் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“>

 

எப்போதுமே அரசியல் லாபத்திற்காகத் திட்டங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, மாணவர்களின் உண்மையான எதிர்காலத் தேவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பாஜக தரப்பு திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.