திமுகவில் இருந்து அண்மையில் விலகிய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான மீனா ஜெயக்குமார், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியில் இன்று முறைப்படி இணைந்தார்.
கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் தவெக-வில் ஐக்கியமானார். அவருக்குக் கட்சியின் பொன்னாடை போர்த்தி, உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி என். ஆனந்த் முறைப்படி கட்சிக்கு வரவேற்பு அளித்தார்.
கோவை மாவட்ட திமுகவில் முக்கியப் புள்ளியாகவும் செல்வாக்கு மிக்க நிர்வாகியாகவும் அறியப்பட்ட மீனா ஜெயக்குமார், கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அண்மையில் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது கோவை அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
