தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நாயகியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்த ராய் லட்சுமி, தற்போது வெள்ளித்திரையைத் தாண்டி தொழில் முனைவோராக விஸ்வரெமெடுத்துள்ளார்.
நீண்ட நாட்களாக சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்கத் தவறிய போதிலும், சமூக வலைதளங்களில் எப்போதும் படு பிஸியாக வலம் வரும் இவர், தற்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சினிமா பிரபலங்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், ராய் லட்சுமி தற்போது வித்தியாசமான களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். ‘ஹவுஸ் பை லாரா’ என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், ‘La Ra’ எனப்படும் பிரத்யேக டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அதிகாரப்பூர்வமாகத் தயாரித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த புதிய செயலி முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்காலத்தில் சமூக வலைதளங்களிலும் டேட்டிங் செயலிகளிலும் ஏமாற்று வேலைகளும், போலி கணக்குகளும் (Fake Profiles) நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்மானமான முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் இந்த ‘La Ra’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
எவ்வித ஏமாற்று வேலையும் இல்லாமல், உண்மையான காதல், உண்மையான நட்பு மற்றும் தங்களது நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடித் தவிப்பவர்களுக்கு இந்தச் செயலி ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளமாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
