திரைப்படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் ஜாலியாகப் பேச முயன்ற பெண் ரசிகை அல்லது சக நடிகை ஒருவருக்கு, பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் அளித்த நகைச்சுவையான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரப் படப்பிடிப்பின் போது காபி பிளெண்டர் பழுதானதால் ஏற்பட்ட அமைதியைத் தவிர்க்க, அங்கிருந்த பெண் ரன்வீரிடம் இயல்பாகப் பேச்சைத் தொடங்கியுள்ளார். காபி தயாரிக்கும் விதத்தைக் குறிப்பிட்டு “கெமிஸ்ட்ரி” என்று அவர் ஜாலியாகக் கூற, அதை ரன்வீர் சிங் தன்க்கே உரிய பாணியில் கலகலப்பாக மாற்றியுள்ளார்.

அந்தப் பெண் தொடர்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க, ரன்வீர் சிங் சட்டென்று சிரித்துக்கொண்டே, “ரொம்பத்தான் ஃபிர்ட் பண்றீங்க… நான் இரண்டு குழந்தைக்கு அப்பாவாக போறேன் பாய்ஸ்!” என்று நகைச்சுவையாகக் பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரன்வீரின் இந்த சட்டென யோசித்துச் சொன்ன சாதுரியமான பதிலும், முகத்தில் வெளிப்பட்ட சிரிப்பும் அங்கிருந்த படப்பிடிப்புத் குழுவினரையும், சமூக வலைதளப் பயனர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

ஏற்கனவே நடிகை தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதியினருக்குப் பெண் குழந்தை உள்ள நிலையில், அடுத்த குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் இந்தச் சூழலில், ரன்வீர் சிங் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த இந்த கியூட்டான ரியாக்‌ஷன் ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.

எப்போதுமே கலகலப்பான சுபாவம் கொண்ட ரன்வீர், எந்தவொரு தர்மசங்கடமான சூழ்நிலையையும் தனக்கே உரிய டைமிங் சென்ஸால் ஜாலியாக மாற்றிவிடுவார் என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“>