இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா தம்பதியினர், மும்பையின் ஆடம்பரப் பகுதியான வெர்சோவாவில் ரூ.18.29 கோடி மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளனர்.

​தற்போது லண்டனில் தங்களது குடும்பத்துடன் குடியேறியுள்ள விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, வேலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அடிக்கடி இந்தியாவிற்குப் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் தங்கும் நேரங்களில் தங்களுக்கு என வசதியான இடம் தேவை என்பதற்காகவே இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பை அவர்கள் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டில் மும்பையின் வோர்லி பகுதியில் ரூ.34 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான வீட்டை விராட் கோலி வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பையின் மற்றொரு முதன்மைப் பகுதியான வெர்சோவாவில் ரூ.18.29 கோடி செலவில் மேலும் ஒரு சொத்தை அவர்கள் வாங்கியிருப்பது, ரசிகர்களிடையேயும் இணையத்திலும் பெரும் விவாதப் பொருளாகவும் சென்சேஷனல் செய்தியாகவும் மாறியுள்ளது.