நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மற்றும் முன்னணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோருக்கு இடையேயான அரசியல் மோதல் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சாட்டை துரைமுருகனை நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.

​சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், நாஞ்சில் சம்பத் ஒருமையில் பேசியதாகவும், தம் கட்சியையும் தலைவர்களையும் மிகவும் மரியாதை குறைவாகப் பேசி அவமதித்து விட்டதாகவும் கூறி ஆதங்கத்துடன் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சாட்டை துரைமுருகனின் இரட்டை வேடத்தை வெட்டவெளிச்சமாக்கும் வகையில் நெட்டிசன்கள் அவரது பழைய வீடியோக்களைத் தோண்டி எடுத்து ஆப்பு வைத்துள்ளனர். ​முன்பு ஒருமுறை சாட்டை துரைமுருகன் நாஞ்சில் சம்பத்தை மிகவும் கொச்சையான வார்த்தைகளில் விமர்சித்த பழைய காணொளியை நெட்டிசன்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்தப் பழைய வீடியோவில், நாஞ்சில் சம்பத்தை “வாடா, போடா” என்று மிகக் கேவலமாக ஒருமையில் அழைத்ததோடு மட்டுமல்லாமல், “நீ நல்ல அப்பனுக்கும் அம்மாவுக்கும் பிறந்திருந்தா, உன் உடம்புல தூய ரத்தம் ஓடுதுன்னா என்னோட ஒன் டு ஒன் சண்டைக்கு வாடா!” என்று பகிரங்கமாக சவால் விட்டுள்ளார். மேலும், கேட்கக் கூசும் அளவுக்குப் பல தகாத வார்த்தைகளையும், கொச்சையான வசைபாடல்களையும் நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக அவர் அள்ளி வீசியுள்ளது அந்த வீடியோவில் அப்பட்டமாகப் பதிவாகியுள்ளது.

​இதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, நெட்டிசன்கள் தற்போதைய புதிய வீடியோவை மேல் பகுதியிலும், சாட்டை துரைமுருகன் நாஞ்சில் சம்பத்தை அசிங்கமாகப் பேசிய பழைய வீடியோவைக் கீழ் பகுதியிலும் இணைத்து (Split Screen Video) ஒரே காணொளியாக உருவாக்கி எக்ஸ் (X) வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

​”அன்று மற்றவர்களைக் கெட்ட வார்த்தையிலும் ஒருமையிலும் பேசிவிட்டு, இன்று மற்றவர் தங்களைப் பற்றிப் பேசும்போது மட்டும் மரியாதை, நாகரிகம் என்று பேசுவது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பி, சாட்டை துரைமுருகனை இணையவாசிகள் வச்சு செய்து வருகின்றனர். இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோ தற்போது எக்ஸ் தளத்தில் காட்டுத்தீ போலப் பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.