சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். ஆனால், சில நேரங்களில் பொழுதுபோக்கிற்காகச் செய்யப்படும் சில விஷயங்கள், ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் தப்பாகப் புரிந்து கொள்ள வைத்து, பெரும் சர்ச்சையாக வெடித்து விடுகிறது. அந்த வகையில், இளம்பெண் ஒருவர் தனது நெற்றியில் “விஜய்” என்று பச்சை குத்திக் கொண்டதாக வெளியான வீடியோ, இணையத்தில் பெரும் ரகளையைக் கிளப்பியுள்ளது.

​சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய ஒரு வீடியோவில், பெண் ஒருவர் தனது நெற்றியில் “விஜய்” என்ற பெயரைப் பச்சை (Tattoo) குத்திக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் தீவிர ரசிகைதான் இவர் என்று நினைத்துக் கொண்டு, “இது முட்டாள்தனத்தின் உச்சம், விளம்பரத்திற்காக இப்படியா செய்வது?” என்று அந்தப் பெண்ணை சமூக வலைதளங்களில் சரம் மாரியாக வறுத்து எடுத்து வந்தனர்.

​இந்நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண் தற்போது நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு அதிரடியாக ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

​அதில் அவர் கூறியதாவது, “நான் எனது நெற்றியில் எந்த ஒரு டாட்டூவும் உண்மையாகப் போடவில்லை. ‘விஜய்’ என்பது எனது கணவரின் பெயர். நாங்கள் ஒரு ‘லவ் கன்டென்ட்’ (Love Content) சம்பந்தமாக, வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் மட்டுமே இந்த வீடியோவை எடுத்தோம்” என்று உண்மையை உடைத்துள்ளார்.

​முதலமைச்சர் விஜய் என்று நினைத்து, அந்தப் பெண்ணை அசிங்கமாகத் திட்டித் தீர்த்த நெட்டிசன்கள் பலரும், தற்போது அந்தப் பெண்ணின் இந்த அதிரடி விளக்கத்தைக் கேட்டு வாயடைத்துப் போயுள்ளனர். ஒரு சாதாரண வேடிக்கை வீடியோ, அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டு இவ்வளவு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.