பழனி முருகன் கோவில் நில மோசடி தொடர்பான வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி (CBCID) எஸ்பி சஜிதா தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிகளைக் கைப்பற்றி தீவிர ஆய்வை மேற்கொண்டனர்.
மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பத்திரப் பதிவு அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் நில மோசடி விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில், இந்த அதிரடிச் சோதனை முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
