பீகார் மாநிலத்தில் ஓடும் இரயிலில் அரசு ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தமிழகத்தையே உலுக்கும் பாணியில் அரங்கேறியுள்ள கள்ளக்காதல் மற்றும் கொலைச் சதி குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

பீகார் மின்சாரத் துறையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்த தேவ் குமார் குஞ்சன் என்பவர், கடந்த ஜூன் 11 அன்று ககாரியா மாவட்டத்தில் உள்ள பட்லா காட் அருகே இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பயங்கர கொலை குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸாரின் அதிரடி விசாரணையில், இந்த கொலையின் பின்னணியில் இருந்த பெண் சிங்கத்தின் முகம் அம்பலமாகியுள்ளது. உயிரிழந்த குஞ்சனின் மனைவியான சமிதா குமாரி, சுபால் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், நாளந்தா பகுதியில் அரசு தொழில்நுட்ப வல்லுநராக இருக்கும் அஜித் குமார் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

தங்களின் கள்ளக்காதல் லீலைகளுக்கு கணவர் குஞ்சன் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக சமிதா நினைத்துள்ளார். இதனால், கணவனை எப்போதும் இல்லாதவாறு நிரந்தரமாக வழி அனுப்ப கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக ராஜு குமார் என்ற பயங்கர குற்றப் பின்னணி கொண்ட கூலிப்படை கொலையாளியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே ஆயுத வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் சுற்றிக்கொண்டிருந்த தீரஜ், சமிதா கொடுத்த ஸ்கெட்ச் படி, குஞ்சன் இரயிலில் பயணித்த சமயம் பார்த்து சுட்டுக் கொலை செய்துள்ளார்.

தற்போது சமிதா குமாரி, கள்ளக்காதலன் அஜித் மற்றும் கூலிப்படை கொலையாளி தீரஜ் ஆகிய மூவரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 2018-ல் காதலித்து கரம் பிடித்த மனைவியே, 5 வயது பெண் குழந்தையையும் பாராமல் கள்ளக்காதலனுக்காக கணவனைக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.