தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ஜனநாயகன்” திரைப்படத்தின் முன்பதிவு தற்போது பெங்களூரில் அதிரடியாகத் தொடங்கி, ஒட்டுமொத்தத் தென்னிந்தியத் திரையுலகையே மிரள வைத்துள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பெங்களூரில் உள்ள முக்கியத் திரையரங்குகளில் முன்பதிவுகள் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் “SOLD OUT” என்ற அறிவிப்போடு விற்றுத் தீர்ந்துள்ளன.
குறிப்பாக, அதிகாலை மற்றும் ரசிகர்களுக்கான முதல் காட்சிக்கான முன்பதிவுத் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே, டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன. எப்போதும் இல்லாத வகையில், டிக்கெட் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு எகிறியுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.800 முதல் அதிகபட்சமாக ரூ.1600 வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
இவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும், தங்களின் அன்பிற்குரிய நாயகனின் கடைசித் திரைப்படத்தை முதல் நாளே திரையில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில், ரசிகர்கள் டிக்கெட்டுகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் அடுத்த சில நிமிடங்களிலேயே ஹவுஸ்ஃபுல் போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
சென்சார் சான்றிதழ் தாமதம், நீதிமன்ற வழக்குகள் எனப் பல்வேறு சட்டப் போராட்டங்களைக் கடந்து ரிலீஸாக உள்ள இந்தப் படத்திற்கு, ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எந்தவொரு புள்ளியிலும் குறையவில்லை என்பதை இந்த அசுர வேக முன்பதிவு நிரூபித்துக் காட்டியுள்ளது. திரையரங்கு உரிமையாளர்களே வியக்கும் அளவுக்கு இந்த முன்பதிவு வேகம் அமைந்துள்ளது.
பெங்களூரில் மட்டுமே இந்த அளவுக்கு மிரட்டலான வரவேற்பு இருக்கும் பட்சத்தில், தமிழகத்திலும் பிற வெளிநாடுகளிலும் முன்பதிவு தொடங்கும்போது என்ன மாதிரியான புதிய உலக சாதனைகளைப் படைக்கப் போகிறதோ என்கிற பேச்சு இப்போதே கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடியான “ஜனநாயகன்” திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை சாதனை மற்றும் SOLD OUT விவரங்கள் அடங்கிய செய்திகள் இப்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது.
