தனது குடும்பத்தின் மதம் குறித்த விமர்சனங்களுக்குப் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது முன்னாள் மனைவிகள் ரீனா, கிரண் மற்றும் தற்போதைய துணைவியார் கெளரி என யாருமே மதம் மாறவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தாங்கள் பதிவுத் திருமணம் மட்டுமே செய்துகொண்டதாகவும், தனது குடும்பம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், தனது சகோதரிகள் மற்றும் மகள் இந்துக்களைத் திருமணம் செய்துகொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமீர்கான், தனது குடும்பத்தின் மீது சுமத்தப்படும் ‘லவ் ஜிஹாத்’ போன்ற விமர்சனங்கள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் நகைப்புக்குரியவை என்று சாடியுள்ளார்.

மதம் தொடர்பான சர்ச்சைகளுக்குப் புள்ளி வைக்கும் வகையில் அவரது இந்த வெளிப்படையான பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.