பின்லாந்து நாட்டின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், காதலன் அல்லது காதலி இல்லாத இளைஞர்களுக்காக பிரத்யேகமாக ‘பிங்க்’ நிற ஷாப்பிங் கூடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் கருப்பு நிறக் கூடைகளுக்கு மாறாக, இந்த பிங்க் நிறக் கூடைகள், தாங்கள் துணையைத் தேடும் சிங்கிள் நிலையில் இருப்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த பிங்க் நிறக் கூடையுடன் ஷாப்பிங் செய்யும் நபர்களைப் பார்த்தால், அவர்கள் தாராளமாகப் பழகலாம், அதாவது ‘அப்ரோச்’ செய்யலாம் என்பது இதன் மறைமுகப் பொருளாகும்.
இந்த நூதனமான யோசனை குறித்த வீடியோ இணையத்தில் வெளியானதும், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காதலைத் தேடும் இளைஞர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்த வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான முயற்சி தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
