சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த ஒரு தாய்க்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்த நிலையிலும், அந்தப் பிஞ்சு குழந்தைகளுக்குத் தங்களது தாய் தங்களை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற உண்மை தெரியவில்லை. ஏற்கனவே இவர்களது தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாகச் சென்றுவிட்ட நிலையில், தங்களுக்கு இருந்த ஒரே ஆதரவான தாயும் சடலமாகக் கிடந்ததை உணராமல், அந்த இரண்டு குழந்தைகளும் மணி கணக்காக அந்த உடலின் அருகிலேயே அமர்ந்திருந்த காட்சி பார்ப்போரின் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.

​பெற்ற தாய் இறந்து கிடப்பதைக் கூட அறியாமல், அவர் எழுந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அந்தப் பிஞ்சுகள் அருகில் அமர்ந்திருந்த நெஞ்சை உலுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கதற விட்டு வருகிறது. இந்த சோகமான சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ‘இனி இந்த குழந்தைகளுக்கு யார் ஆதரவு?’ என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான ஆதரவும், தைரியமும் கிடைக்க வேண்டும் எனப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.