தற்கொலை செய்து கொள்வதற்காக இளம்பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்த நிலையில், அவர் அசந்த நேரம் பார்த்து இளைஞர் ஒருவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கீழே குதிக்காமல் தடுத்து நிறுத்தினார். அந்த இளைஞர் பெண்ணைக் காப்பாற்றப் போராடுவதைக் கண்ட அங்கிருந்த மற்றவர்களும் உடனடியாக ஓடிவந்து, அந்த இளைஞருடன் இணைந்து அந்த இளம் பெண்ணை பத்திரமாக மீட்டனர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்தப் பெண்ணின் உயிர் போயிருக்கும் என்ற நிலையில், இளைஞர்களின் இந்தச் சமயோசித புத்தி மற்றும் துணிச்சலான செயல் அந்தப் பெண்ணை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளது.

​மரணத்தின் விளிம்பில் நின்ற பெண்ணை வாலிபர் ஒருவர் ஃபரிஷ்தா போல (தேவதூதன் போல) வந்து காப்பாற்றிய இந்த நெஞ்சை பதறவைக்கும் திக் திக் காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வேகமாகப் பரவி வைரலாகி வரும் நிலையில், அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இளைஞரை ஒட்டுமொத்த இணையவாசிகளும் பாராட்டி, நிஜமான ஹீரோ இவர்தான் எனத் தங்களது வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.