கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக, மருத்துவர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆறு மாதக் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அந்த மருத்துவர் அளவுக்கு அதிகமான பாராசிட்டமால் மாத்திரையைப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மருந்தை உட்கொண்ட சில நாட்களிலேயே குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூழல் உருவானது.

இது குறித்துக் குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மருத்துவப் பதிவுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த காவல்துறையினர், அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.