கரூர் மாவட்டத்தில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் முதல் அமைச்சர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பின்போது கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது சின்னாங்கோவில் பகுதியை சேர்ந்த மெல்வின் என்பவர் முதலமைச்சர் விஜயை சந்திக்க ஆர்வத்துடன் வந்தார். இவர் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர் என கூறப்படும் நிலையில் முன்னால் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் புகைப்படம் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி போன்றவற்றை தன்னுடைய சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்த நிலையில் அவரிடம் அனுமதி அட்டை இல்லாததால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.
View this post on Instagram
இதனால் ஆத்திரத்தில் அருகில் இருந்த பேனர்களை அவர் கிழித்த நிலையில் அதனை வீடியோ எடுத்த பத்திரிகையாளர்கள் மீதும் கல் மற்றும் பாட்டில்கள் போன்றவற்றை தூக்கி வீசினார். இதனைப் பார்த்த டிஎஸ்பி கார்த்திகேயன் அவரிடம் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற அவர் டிஎஸ்பியின் கையையும் கடித்து வைத்தார். இதை பார்த்து மிரண்டு போன சக போலீசார் உடனடியாக ஓடி வந்து டிஎஸ்பியை மீட்டனர். பின்னர் டிஎஸ்பி மெல்வின் கன்னத்தில் இரண்டு அறை விட்ட நிலையில் பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் முதலமைச்சர் விஜய் கிளம்பிய பிறகு தான் மெல்வினை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
