“தம்பி வைபவ்.. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா, திரும்ப திரும்ப  இதே மாதிரி ஷார்ட் பால்ல அவுட் ஆகி டீம்கே அசிங்கத்தை தேடித்தர்றியே,  இப்படியே ஆடுனா  எப்படி மேட்ச் ஜெயிக்கிறது?”

என்று இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியிலும் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி பவுன்ஸர் பந்தில் அவுட்டாகி வெளியேறிய போது, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் டிரிஸ்ஸிங் ரூமிலேயே  கோபத்துடன் கத்தித் தீர்த்துள்ளார்;

“>

 

ஐபிஎல் 2026 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் ஸ்டார்க் போன்றோரை வெளுத்து வாங்கிய 15 வயது வைபவ், சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து பிட்சுகளின் கூடுதல் பவுன்ஸை கணிக்க முடியாமல் ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் பிட்ச் வியூகத்தில் தொடர்ந்து சிக்கி (14, 13, 15 ரன்கள்) சொற்ப ரன்களில் விக்கெட்டை வாரி வழங்கியதே காம்பீரின் இந்த உச்சக்கட்ட ஆத்திரத்திற்குக் காரணமாகும்.

இதனால் கடுப்பாகியுள்ள காம்பீர், சனிக்கிழமை சவுதாம்டனில் நடக்கவிருக்கும் அடுத்த வாழ்வா சாவா போட்டிக்கான பிளேயிங் லெவனில் இருந்து வைபவ்வை  நீக்க படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.