கால்பந்து உலகின் அசைக்க முடியாத சக்கரவர்த்தி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, வானத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்டமான ட்ரிபியூட் (Tribute) வீடியோ தற்போது ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் ஆக்கிரமித்துள்ளது. ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் ஒரே நேரத்தில் வானில் ஒருங்கிணைக்கப்பட்டு, முதலில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் நாட்டு ஜெர்சி அணிந்த உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளன.
அதைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற ரொனால்டோவின் ஐகானிக் கொண்டாட்டமான ‘SIUUU’ ஸ்டைலை அந்த ட்ரோன்கள் வானத்தில் தத்ரூபமாகச் செய்து காட்டியபோது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மெய்சிலிர்த்துப் போனது.vவிளையாட்டு உலக வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு வானத்தில் நடத்தப்பட்ட மிக பிரம்மாண்டமான மற்றும் பிரமிக்க வைக்கும் வான்வழி காட்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் காட்டுத்தீ போல ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
“கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கொண்டாட்டம் இதுதான்!” என்று ரசிகர்கள் இணையத்தில் கமெண்டுகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். நீங்கள் ரொனால்டோவின் ரசிகராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வானத்தையே அதிர வைத்த இந்த அதிரடி காட்சி, சிஆர்7 (CR7) என்ற பெயரின் லெகசி உலகம் முழுவதும் எத்தனை மில்லியன் மக்களை உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு மிகச்சிறந்த சாட்சியாக மாறியுள்ளது!
