பிரபல மராத்தி திரைப்படமான ‘சாய்ராட்’ படத்தில் கதாநாயகனின் நெருங்கிய நண்பனான ‘சல்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் அர்பாஸ் ஷேக், தற்போது தனது நிஜ வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தைச் சந்தித்து வருகிறார்.

அதோடு அவரது தந்தை கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அதிகாலை 4 மணியளவில் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. “என் தந்தை இறப்பதை என்னால் பார்க்க முடியாது, தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்று அவர் கதறி அழுதுள்ளார்.

“>

மேலும் மருத்துவமனைகளில் அதிக அளவில் பணம் சுரண்டப்படுவதாகவும், இதனால் தனது தந்தையை ‘நோபல்’ மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியிருந்ததாகவும் கூறிய அவர், அங்கேயும் தனக்கு மிகவும் மோசமான அனுபவமே கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தைக்கு எங்கு, எப்படிச் சிறந்த சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் முற்றிலும் தவித்துப் போயுள்ளதாக அர்பாஸ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அர்பாஸ், தனது தந்தையின் மருத்துவச் செலவுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காகப் பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காகத் தனது கூகுள் பே எண்ணையும் (Google Pay: 8888515473) அவர் பகிர்ந்துள்ளார்.

இதனால் தங்களால் இயன்ற சிறு தொகையை அனுப்பி உதவுமாறும், பணம் கொடுத்து உதவ முடியாதவர்கள் இந்தத் தகவலையாவது அதிக அளவில் மற்றவர்களுக்குப் பகிர்ந்து உதவுமாறும் அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். உங்களின் இந்தச் சிறிய உதவி தனக்குப் பெரிய அளவில் கை கொடுக்கும் என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.