நாட்டின் பொதுப் போக்குவரத்தான மெட்ரோ மற்றும் ரயில்களில் நடக்கும் பல்வேறு விசித்திரமான, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஓடும் ரயிலின் முன்பதிவுப் பெட்டியில்  உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம், வாலிபர் ஒருவர் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பூஜா சின்ஹா என்ற சமூக வலைதளப் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரயிலின் கீழ் இருக்கையில் இரண்டு பெண்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு வாலிபர், தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களில் ஒருவரிடம் மிகவும் அசிங்கமான மற்றும் அநாகரிகமான முறையில் அத்துமீறி அநாகரிகச் செயலில் ஈடுபடுகிறார். அந்த நபரின் இந்த அத்துமீறல் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறார்.

 

தன்னைச் சுற்றி நடக்கும் அநாகரிகத்தை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாக தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணையும் எழுப்புகிறார். தொடர்ந்து, அந்த வாலிபரின் அநாகரிகச் செயலைக் கண்டு ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும் சேர்ந்து, அந்த வாலிபரை வெளுத்து வாங்குகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளதோடு, பெண்களின் இந்தத் துணிச்சலான நடவடிக்கைக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்தச் சம்பவம் எந்தப் பகுதியில், எந்த ரயிலில் நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.