சமூக வலைதளங்களில் குழந்தைகளும் விலங்குகளும் சேர்ந்து செய்யும் சுட்டித்தனமான வீடியோக்களுக்கு எப்போதும் தனிப் பெரிய வரவேற்பு உண்டு. அந்த வகையில், ஒரு சிறிய பாப்பா குட்டி யானை ஒன்றுடன் ஐஸ்கிரீமை வைத்து விளையாடிய கியூட்டான பாசப் போராட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி இதயங்களை வென்று வருகிறது.

பொதுவாக விலங்குகளிடம் உணவைக் காட்டி ஏமாற்றக் கூடாது என்று சொல்வார்கள்; ஆனால் இந்த வீடியோவில், அந்தச் சிறுமி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ்கிரீமை குட்டி யானைக்குக் கொடுப்பது போலக் காட்டிவிட்டு, சட்டென்று கையை இழுத்து ஏமாற்றியுள்ளார்.

தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அந்தச் செல்லக் குட்டி யானை, சற்றும் கோபப்படாமல் தன் தும்பிக்கையால் அந்தச் சிறுமியின் கழுத்தைப் பிடித்து இழுத்து விளையாட்டாக தனது செல்லக் குறும்புத் தனத்தைக் காட்டியுள்ளது. உடனே அந்தப் பாப்பா பயப்படாமல், சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீமை அந்த குட்டி யானையிடம் கொடுத்துள்ளது.

“>

ஐஸ்கிரீமை ஆசையாக வாங்கிச் சாப்பிட்டு முடித்த அந்த யானைக்குட்டி, தனக்கு உணவு கொடுத்த நன்றியிலும் பாசத்திலும், அந்தச் சிறுமியின் மென்மையான கன்னத்தைத் தன் தும்பிக்கையால் செல்லமாகப் பிடித்துக் கொஞ்சி விளையாடியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு இந்த வீடியோ, “அன்பும் குறும்புத்தனமும் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல” என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.