உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், காவி உடை அணிந்த நபர் ஒருவர் சைக்கிள் மற்றும் 1,000 ரூபாய் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமிகளைத் தவறான வழியில் பயன்படுத்த முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு அந்த நபரின் கள்ளத்தனமான நோக்கத்தை முன்கூட்டியே உணர்ந்த ஒரு தைரியமான சிறுமி, சற்றும் பயப்படாமல் அந்த நபரைத் தப்பவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். சிறுமியின் இந்தத் துணிச்சலான செயலால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முடியாமல் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
Besharam Rang Caught red handed
Saffron clad pervert in Rishikesh was trying to exploit young girls by luring them with an offer of a cycle and ₹1000.
One brave kid caught hold of him after which Public gave proper Belt Treatment.. pic.twitter.com/fA8Oa91fwQ
— D (@Deb_livnletliv) July 5, 2026
“>
இதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அந்த நபரின் கொடூரமான செயலை அறிந்து ஆத்திரமடைந்து, அவருக்கு பெல்ட் மூலம் தர்ம அடி கொடுத்து உளுத்து எடுத்தனர். ஆன்மீக பூமியான ரிஷிகேஷில் காவி உடையைப் போர்த்திக்கொண்டு, பழிபாவத்திற்கு அஞ்சாமல் சிறுமிகளுக்கு வலைவீச முயன்ற இந்த நபரைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் முன் பொதுமக்கள் கையாண்ட விதம் குறித்த செய்திகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
