அமெரிக்கா துணை அதிப பேசிய ஜே.டி. வான்ஸ், லெபனான் மீதான தாக்குதல் முரண்பாடுகளால் இஸ்ரேல் அமெரிக்காவை விமர்சித்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார். “நான் ஒருவேளை இஸ்ரேல் அமைச்சரவையில் இருந்திருந்தால், உலகிலேயே அந்நாட்டிற்கு இருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளியான அமெரிக்காவைத் தாக்கிப் பேசியிருக்க மாட்டேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி பேட்டியளித்துள்ளார். அதில், “நான் ஜே.டி. வான்ஸ்-ஐ மதிக்கிறேன், எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. ஆனால் அதற்காக அவர் சொல்லும் எல்லாவற்றிலும் நான் உடன்பட வேண்டும் என்று அர்த்தமில்லை.
அமெரிக்காவின் முந்தைய அதிபர்களிலேயே டிரம்ப் தான் எங்களின் சிறந்த நண்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எங்களுக்கு இந்தியா போன்ற வேறு சில நண்பர்களும் உள்ளனர். 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் எங்களுக்குப் பேராதரவு உள்ளது.
குறிப்பாக நான் அதிகம் பயன்படுத்தும் முகநூலில் இந்தியாவில் இருந்து எனக்கு ஆதரவுகள் வந்து குவிகின்றன என்று பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் விமர்சனங்கள் இருந்தாலும் பல நாட்டுத் தலைவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருவதாகவும், டிரம்ப் நேட்டோ கூட்டத்தில் பங்கேற்றுத் துருக்கியிலிருந்து திரும்பிய பின் அவரைச் சந்திக்கத் தான் நேரம் கேட்டுள்ளதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
