அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீயணைப்பு வீரர்களுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட ஜேசன் ரால்ஃபா என்ற தீயணைப்பு வீரர், தனது பட்டமளிப்பு விழாவின் இறுதி நாளில் காதலிக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கத் திட்டமிட்டார். அதன்படி, ஒரு பெரிய கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது போலவும், அதில் சிக்கியிருக்கும் தனது காதலி டசியாவை தீயில் இருந்து மீட்பது போலவும் ஒரு தத்ரூபமான நாடகத்தை அரங்கேற்றினார்.
இதற்காகத் தனது நண்பர்கள் மற்றும் சக தீயணைப்பு வீரர்களின் உதவிகளையும் அவர் நாடியுள்ளார். இந்த ஒத்திகையின் போது, கட்டடத்தின் ஜன்னல் வழியே காதலி பார்த்துக் கொண்டிருக்க, தீயணைப்பு உடையில் இருந்த ஜேசன் ரால்ஃபா கயிற்றின் உதவியுடன் மேலிருந்து கீழ்நோக்கி ஆபத்தான முறையில் இறங்கி வந்துள்ளார்.
Proby Proposal™️
Probationary Firefighter Jayson Ralph got down on one knee on Saturday at Family Day. All-hands were clearly operating to help ask the question.
His now fiancée, Dasia Moore, said YES! Congrats, Proby! pic.twitter.com/WucxfT9Eub
— FDNY (@FDNY) June 29, 2026
பின்னர் ஜன்னல் அருகே வந்தவுடன், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது காதலி டசியாவிடம் காதலை வெளிப்படுத்தி மோதிரம் மாற்றியுள்ளார். காதலனின் இந்த அதிரடியான மற்றும் ரொமாண்டிக்கான செயலைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், நெகிழ்ச்சியோடு தனது சம்மதத்தைத் தெரிவித்தார். தீயணைப்பு வீரரின் இந்த வித்யாசமான காதல் ‘புரொபோசல்’ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
