அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல ஊடக நிறுவனமான ‘ஆக்ஸியோஸ்’க்கு அளித்த நேர்காணலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவிக்க நெதன்யாகு தொலைபேசியில் அழைத்தபோது, இரு தலைவர்களும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய டிரம்ப், தங்களுக்குள் நல்ல நட்பு இருப்பதாகக் கூறினாலும், தங்களில் ‘பாஸ்’ யார் என்று நெதன்யாகுவுக்கு நன்றாகவே தெரியும் என்று தனது வழக்கமான அதிரடி பாணியில் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளதால், இரு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பு அடுத்த வாரத்திலோ அல்லது அதற்கு அடுத்த வாரத்திலோ நடைபெறலாம் என இஸ்ரேல் அரசு தரப்பில் கூறப்படுகிறது.