சமூக வலைதளங்களில் இளம்பெண் ஒருவர் மிகவும் அமைதியாகவும், அசாத்திய தன்னம்பிக்கையுடனும் ஒரு பெரிய நீளமான பாம்பைப் பிடித்து மீட்பது  போன்ற வீடியோ தற்போது  பரவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.

இன்ஸ்டாகிராமில் @saiba__19என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெண் எந்தப் பயமும் பதற்றமும் இன்றி அந்தப் பாம்பை லாவகமாகக் கையாள்வதைப் பார்த்து சுற்றியிருப்பவர்கள் மிரண்டு போய் பார்க்கிறார்கள். வீடியோவின் தலைப்பில், மீட்கப்பட்ட அந்தப் பாம்பு விஷமற்ற ‘சாரை பாம்பு’  இனம் என்றும், இது மனிதர்களுக்குப் பொதுவாக எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டினாலும், முறையான பயிற்சியும் பாம்புகளைப் பற்றிய சரியான புரிதலும் இல்லாமல் யாரும் இது போன்ற ஆபத்தான காரியங்களில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்றும், காடுகளில் வாழும் உயிரினங்களுக்குப் போதிய இடைவெளியைக் கொடுத்து மதிப்பளிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by 𝓢𝓪𝓱𝓲𝓫𝓪 𝓜𝓮𝓽𝓪𝓷𝓰𝓮 (@saiba__19)

“>

மேலும், இது போன்ற சூழல்களில் உள்ளூர் வனத்துறையினரையோ அல்லது பயிற்சி பெற்ற பாம்பு மீட்புக்கு அழைப்பதே பாதுகாப்பானது என வனவிலங்கு ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.