ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்சி அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை பெற்ற நிலையில் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ள வைபவுக்கு வெறும் 15 வயது மட்டுமே தற்போது ஆகும் நிலையில் இந்திய ஏ அணியில் இடம்பெற்று இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில் மிரட்டலாக விளையாடி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திய சீனியர் அணையில் இடம் கிடைத்த நிலையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஐந்து தொடர்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் இதில் வைபவுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும் முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்த நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வைபவ் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக மிக இளம் வயதில் அறிமுகமாகி விளையாடிய வீரர் என்ற சாதனையை தற்போது வைபவ் புரிந்தார். மேலும் இதற்கு முன்பாக கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் ஜாம்பவான் 16 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமானது சாதனையாக இருந்த நிலையில் தற்போது சச்சின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.
