நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 3 முக்கியக் கொலையாளிகளைப் போலீசார் அதிரடியாக வளைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர். இந்த கொடூர இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மூலச்சி பகுதியைச் சேர்ந்த மகேஷ், குமார் மற்றும் ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் ஆகிய 3 பேரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துப் போலீசார் இந்த அதிரடி ஆக்ஷனை எடுத்துள்ளனர்.

​கைது செய்யப்பட்டுள்ள இந்த 3 பேரிடமும் கொலைக்கான முழுமையான பின்னணி மற்றும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பதுங்கியிருந்த கொலையாளிகள் மூவரும் கூண்டோடு பிடிபட்டிருப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஓரளவிற்கு நிம்மதியைத் தந்துள்ளதோடு, அப்பகுதியில் நிலவி வந்த பதற்றமும் தற்போது தணிந்துள்ளது.