சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், “நாங்க இருக்கோம், மீண்டும் வருவோம்” என்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நாள்தோறும் வரும் உடன்பிறப்புகள் அளிக்கும் குரலே கட்சியின் புதிய முழக்கமாக மாறியுள்ளதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தொண்டர்களின் இந்த அபாரமான எழுச்சியும் புது உற்சாகமும் தனக்கு அடுத்தகட்டப் பணிகளுக்கான மாபெரும் ஊக்கத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உடன்பிறப்புகளின் இந்த உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான நெடிய பயணத்தைத் திட்டமிடும் முதற்கட்டப் பணிகளைத் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சூழலில் இருவார காலத் தனிப்பட்டப் பயணமாக வெளிநாடு செல்லவிருப்பதை உறுதி செய்துள்ள மு.க.ஸ்டாலின், தான் தற்காலிகமாக அயலகத்தில் தங்கியிருந்தாலும் தனது சிந்தனையும் மனமும் எப்போதும் அண்ணா அறிவாலயத்தையும், கட்சியின் மறுமலர்ச்சிப் பணிகளையுமே சுற்றியிருக்கும் என்று தொண்டர்களுக்கு உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” – இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின்… pic.twitter.com/zw2WsYYjXb
— M.K.Stalin (@mkstalin) July 4, 2026
“>
