முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டு, நேற்று மாலையிலேயே ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், தற்போது காவல்துறையினரையும் மிகக் கேவலமான வார்த்தைகளால் ஒருமையில் பேசியுள்ள விவகாரம் சோசியல் மீடியாவில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
தவெக ஆட்சிக்கு எதிராக நேற்று மாலை அவர் கொடுத்த பேட்டி ஒருபுறம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் போலீசாரை நோக்கி, “போலீசாவது ம*ராவது…” என்று மிகக் கொச்சையான முறையில் ஒருமையில் பேசியுள்ள விபரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீசாவது ம*ராவது ஒருமையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்!
போலீசாவது ம*ராவது.. காவல்துறையினரை ஒருமையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.#ssnews #dailynews #newsupdate #tuticorin #anitaradhakrishnan #arrest pic.twitter.com/PVpMlh4fXt
— SS News Digital (@SSNEWSDigital) July 3, 2026
சட்டம் தன் கடமையைச் செய்யும்போது, பொதுவெளியில் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு முன்னாள் அமைச்சரே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இருக்கும் காவல்துறையினரை இப்படி மதிக்காமல், அவதூறான வார்த்தைகளால் ஒருமையில் பேசியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
