வெளிநாட்டில் ஒன்றில் உள்ள துரித உணவுப் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், வெறும் 20 ரூபாய் (டாலர்) மதிப்பிலான ஸ்ப்ரிங் ரோல் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்துவிட்டு, அதற்கான பணத்தைக் கொடுப்பதற்காகக் கடைக்காரரைத் திணறடித்த விநோதமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது;

அந்தப் பெண் ஸ்ப்ரிங் ரோலை ஆர்டர் செய்துவிட்டு, கடைக்காரர் அதைச் செய்து கையில் கொடுக்கும் போது “எவ்வளவு?” என்று கேட்டுள்ளார்; அதற்கு அவர் 20 ரூபாய் எனக் கூற, அந்தப் பெண் தனது பைக்குள் இருந்து ஒரு பர்ஸை எடுத்துள்ளார்; ஆனால், அந்தப் பர்ஸைத் திறந்தால் அதற்குள் மற்றொரு பர்ஸ், அதைத் திறந்தால் அதற்குள் இன்னொன்று என மொத்தம் 6 முறை உள்ளுக்குள் இருந்த பர்ஸ்களை வரிசையாக எடுத்து, இறுதியாக அதிலிருந்த சில்லறைக் காசை எடுத்துப் பொறுமையாகக் கொடுத்துள்ளார.

“>

பணத்தைப் பெற்றுக்கொண்டு கடைக்காரர் பொருளைக் கொடுத்த பிறகு, மீதி சில்லறையையும் அதேபோல் 6 பர்ஸ்களுக்குள் ஒவ்வொன்றாக அடுக்கு வைத்துவிட்டு அவர் கிளம்பிச் சென்றுள்ளார்; கடைக்காரரின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வேடிக்கையான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.