நாய் அல்லது பூனை போன்ற விலங்குகள் கடித்த பிறகு முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தத் தவறியதால், 13 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான ரேபிஸ் வெறிநாய் கடி நோயின் இறுதிப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் அதிர்ச்சி விபரம் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டை வலி மற்றும் விழுங்குவதில் சிரமம் இருப்பதாகக் கூறி அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்ட அந்தச் சிறுவனுக்குத் தண்ணீர் பாட்டிலைக் காட்டிய போது, அவன் கடுமையான மூச்சுத் திணறலுடனும் அச்சத்துடனும் அலறியுள்ளான் விசாரணையில், சிலமாதங்களுக்கு முன்பு அவனைக் கடித்த நாயின் காயத்தைச் சாதாரணக் காயம் என நினைத்து, முறையான மருத்துவ உதவியைப் பெறாமல் குடும்பத்தினர் நாட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது.
ரேபிஸ் வைரஸ் மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கி, தண்ணீரைக் கண்டு பயப்படும் நிலை போன்ற அறிகுறிகள் வெளியே தெரிந்த பிறகு நோயாளியைக் காப்பாற்றுவது அசாத்தியமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Seorang anak laki-laki usia 13 tahun datang ke IGD karena susah menelan dan tenggorokannya terasa aneh. Awalnya dikira keluarganya penyakit biasa. Tapi saat coba diberi botol berisi air, dia langsung panik dan seperti tersedak. Ternyata… itu gejala rabies. 💔
Baru setelah… pic.twitter.com/lbOaJmj3Dn
— faizal bhima (@icalbhimaa) June 30, 2026
“>
எனவே, நாய் அல்லது பூனை கடித்தால் உடனே சோப்பு மற்றும் ஓடும் நீரில் 10-15 நிமிடங்கள் காயத்தைக் கழுவி, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆன்டி-ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவத் துறை வலியுறுத்தியுள்ளது.
