மரகதம் குமரவேலுக்குப் பெயர் வச்சதே நம்ம புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான்; அதனால்தான் அதிமுக துரோகம் பண்ணப்ப தைரியமா பதவியை தூக்கி எறிஞ்சாங்க!” என்று மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெகவின் பிரம்மாண்ட மாற்றுக்கட்சி இணைப்பு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவுடன் அதிமுக ரகசியக் கூட்டணி அமைக்க முயற்சி செய்ததை எதிர்த்துதான், தொகுதி மக்களின் உணர்வுகளை மதித்து மரகதம் குமரவேல் தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அசல் விசுவாசிகள் தற்பொழுது தளபதி விஜய்யின் தவெகவை நோக்கி அணிவகுத்து வருவதாக அவர் பேசிய பேச்சு,  அரசியல் வட்டாரங்களில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.