தமிழக வெற்றி கழகத்தின் ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா. இவரிடம் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கிட்டத்தட்ட 35 கோடி வரையில் பேரம் பேசியதாக தற்போது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய செய்தி ஒன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எம்எல்ஏ கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரிடம் பேரம் பேச முயற்சி செய்த திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த தியாகராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்னர்.

இவர்கள் இருவரும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய கூடுதல் விசாரணையில் செந்தில் பாலாஜியின் தம்பியான அசோக்குமார் தான் நரேஷ் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரை தூண்டிவிட்டு பேரம் பேச கூறியதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் 15 நாட்கள் வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.