முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஜூன் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் நடந்த இந்த பணியில், வெறும் 17 நாட்களில் பக்தர்கள் மொத்தம் 2 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 122 ரூபாயை ரொக்கமாகச் செலுத்தியுள்ளனர். இந்தத் தகவல் முருக பக்தர்களிடையே பெரும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரொக்கப் பணத்தோடு சேர்த்து, பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் காணிக்கையாக வழங்கியுள்ளனர். அதன்படி, 620 கிராம் தங்கம், 10 கிலோவிற்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள், 22 கிலோ பித்தளைப் பொருட்கள் மற்றும் 1,502 வெளிநாட்டுப் பணத்தாள்கள் உண்டியலில் இருந்து கிடைத்துள்ளன.
View this post on Instagram
“>
கோவில் பணியாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணிக்கையின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
