தன் கணவனை விடவும் கூடுதல் வருமானம் ஈட்டும் ஒரு பெண், அவரிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. குடும்ப நல வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் பின்னணியில், மனைவியை விடக் குறைவான வருமானம் ஈட்டும் கணவனை, ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது சட்டப்படி நியாயமற்றது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் 20,000 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று முன்னதாக கீழ் நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொதுவாக விவாகரத்து வழக்குகளில் மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது அடிப்படை விதியாக இருக்கும் நிலையில் தற்போது நன்கு படித்த வேலையில் இருக்கும் அதிகம் சம்பாதிக்கும் பெண்களுக்கு ஜீவனாம்சம் தேவை இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
