நம்மில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறையாவது வெளியில் சென்று ஜூஸ் குடிப்பதையோ அல்லதுFast Food சாப்பிடுவதையோ வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால், நாம் ஆசை ஆசையாகக் குடிக்கும் இந்த தெருவோர உணவுகளும், ஜூஸ்களும் எவ்வளவு அசுத்தமான சூழலில் தயாரிக்கப்படுகின்றன என்பதைத் தோலுரித்துக் காட்டும் வீடியோக்கள் வெளியாகும் போதெல்லாம், “இனிமேல் கடையிலேயே சாப்பிடக் கூடாது” என்று மக்கள் அலறியடித்துக் சத்தியம் செய்யும் நிலைதான் ஏற்படுகிறது.
ஏற்கனவே பேத்தா (Petha), மோமோஸ் மற்றும் நம்கீன் போன்ற உணவுகள் மிகவும் அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் கொடூரமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் காட்சியில், அவர்கள் வேலை செய்யும் விதம் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது.
ஜூஸ் தயாரிக்கும் அந்தப் பகுதியில் ஒரு பெண் செருப்பு கூட போடாமல், சகதியும் அழுக்கும் நிறைந்த தரையில் நின்றுகொண்டு வேலை செய்கிறார். மற்றொரு பெண் கைகளில் கிளவுஸ் அணிந்திருந்தாலும், காலில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அசுத்தமான இடத்தின் நடுவே நின்று ஜூஸைத் தயாரிக்கிறார்.
स्वाद के पीछे भागने से पहले एक बार ये भी देखिए कि आपकी पसंदीदा ड्रिंक किन हालात में तैयार हो रही है, सोचने पर मजबूर कर देगा। pic.twitter.com/vCBMrFC4yi
— JIMMY (@Jimmyy__02) June 29, 2026
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் லட்சக்கணக்கான வியூஸ்களைக் கடந்து வைரலாகி வரும் நிலையில், “சுவைக்கு ஆசைப்படும் முன், அது எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்” என்று நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர். பலர், “மிருகங்கள் சாப்பிடுவதை விட மோசமான நிலையில் இருக்கும் இந்த அசுத்தமான ஜூஸ்களை மக்கள் எப்படித்தான் குடிக்கிறார்களோ!” என்று தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
