மும்பை பகுதியில் உள்ள புகழ்பெற்ற வாஷி ஏ.பி.எம்.சி சந்தையிலிருந்து வெளியாகி இருக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மார்க்கெட்டில் வியாபாரிகளால் குப்பையில் வீசப்பட்ட அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்களை ஒரு கும்பல் அள்ளிச் சென்று, அவற்றை சுத்தம் செய்து, புதியது போல மீண்டும் பேக்கிங் செய்து மும்பை மக்களுக்கு விற்பனை செய்வதாக அந்த வீடியோவில் தெரியவந்துள்ளது.
कचऱ्यातील भाज्या मुंबईकरांच्या ताटात..? कचऱ्यातील भाज्यांचे पुन्हा होतेय पॅकिंग? वाशी मार्केटमधील धक्कादायक व्हिडिओ… pic.twitter.com/1CBmnXdlNN
— Gangappa Pujari (@GangappaPujar07) June 29, 2026
“>
மேலும் நாட்டின் முன்னணி சந்தைகளில் ஒன்றான இங்கிருந்துதான் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தினமும் பெருமளவில் காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல் லாபத்திற்காக இதுபோன்ற செயல்களில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமன்றி, காய்கறிகள் மற்றும் பழங்கள் நீண்ட நேரம் புதியதாகவும் பளபளப்பாகவும் காட்சியளிப்பதற்காக அவற்றில் ஆபத்தான ரசாயன நிறங்கள் மற்றும் எலி விஷம் போன்ற நச்சுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் சமீபகாலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் குப்பை மேட்டிலிருந்து எடுக்கப்படும் இந்த அழுகிய காய்கறிகள் நேரடியாக மக்களின் தட்டுகளுக்குச் சென்று விஷமாக மாறுவதாகவும், இதனால் பொதுமக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடும் கும்பல்கள் மீது உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறையினரும், காவல் துறையினரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
