மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற தீ மிதி திருவிழாவின் போது எடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், தேவேந்திரா (28) என்ற வாலிபர் நேர்த்திக்கடனுக்காகத் தீக்குண்டத்தில் இறங்கி நடக்கத் தொடங்குகிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் நிலைதடுமாறியதில், அவர் தப்பியோட முடியாமல் எரியும் நெருப்பிற்குள்ளேயே விழுந்து விடுகிறார்.

​அடுத்த நொடியே அவரது உடல் முழுவதும் தீப்பிடித்துக் கொள்ள, அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு அவரை மீட்கும் கொடூரக் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த வாலிபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பார்ப்போரைக் பதற வைக்கும் இந்தத் தீ விபத்து வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.