மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாலை மற்றும் பால வசதி இல்லாததால், பிரசவ வார்டுக்குக் கூட செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தில் கட்டிலில் சுமந்து சென்ற நெஞ்சை உலுக்கும் விசித்திர வீடியோ ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா (Chhindwara) மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது; ஆனால், கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்குச் செல்ல முறையான சாலையோ, நடுவில் இருக்கும் ஆற்றைக் கடக்கப் பாலமோ இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே வர முடியவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள், வேறு வழியின்றி அந்தப் பெண்ணை ஒரு சாதாரணக் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து, தங்களது தோள்களில் சுமந்தபடி, சுழன்றடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர்.
In Hathoda village, located in the Chindwara region of Madhya Pradesh, a pregnant woman had access to neither a road nor a bridge, nor did an ambulance arrive on time.
When her condition became critical after delivery, villagers carried her across the river on a *khatia*… pic.twitter.com/TggxBSN2Uk
— The Dalit Voice (@ambedkariteIND) June 28, 2026
எல்லாவற்றையும் விட கொடுமையாக, அவர்கள் ஆற்றைக் கடந்து கரை ஏறுவதற்குள்ளாகவே அந்தப் பெண்ணுக்குக் கட்டிலிலேயே பிரசவம் நடந்து அங்கேயே குழந்தையும் பிறந்துவிட்டது. இந்த 2026-ஆம் ஆண்டின் அதிநவீன டிஜிட்டல் காலத்திலும், இந்தியாவின் ஒரு கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிக்காக ஒரு கர்ப்பிணிப் பெண் இப்படி உயிரைப் பணயம் வைத்துப் போராட வேண்டியுள்ள அவல நிலையை இந்த வீடியோ வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து தீயாய் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “தேர்தல் நேரத்துல மட்டும் ஓட்டுக்கேட்க வர்றாங்களே, இன்னமும் ஒரு பாலம் கட்டிக் கொடுக்கக் கூடாதா பாஸ்?!” என்று ஆளும்கட்சியினரை கமெண்ட் பாக்ஸில் சரமாரியாகக் கேள்வி கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
