கடந்த ஜூன் 26, 2026 அன்று ரயில் நிலையத்தில், தனது நியாயமான குறையைப் பதிவு செய்ய அமைதியான முறையில் புகார் புத்தகத்தைக் கேட்ட பயணி பிரவீன் குமாரிடம், அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் குரூப் ‘D’ ஊழியர் ஆகியோர் மிகவும் மோசமாக நடந்துகொண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்லுபடியாகும் ஐடி கார்டு மற்றும் மொபைலில் டிஜிட்டல் எம்எஸ்டி எண்னைக் காட்டிய பிறகும், ஐடி கார்டு நகல் கேட்டு கட்டாயப்படுத்தியதோடு புகார் புத்தகத்தை வழங்க மறுத்து அந்த ஊழியர்கள் பயணியை அலுவலகத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளனர் இதற்கு ஸ்டேஷன் மாஸ்டரும் முழு உடந்தையாக இருந்துள்ளார்.
ரயில்வே அதிகாரிகளின் கடமைகளுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் தனது உரிமையைக் கேட்ட பயணி, இந்த ஒட்டுமொத்த அராஜகத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து, நிலையத்தின் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி டிஆர்எம் நிர்வாகத்திற்குப் புகார் அனுப்பியுள்ளார்.
Station: Ghari Harsaru
Date : 26 June 2026
Time: 06.10I peacefully approached the Station Master’s office to obtain the Complaint Book for lodging a genuine grievance.
– Even before I started recording the video, the Station Master misbehaved and did not facilitate my request… pic.twitter.com/4c6oi8XxiU
— Praveen (@Praveen93591478) June 27, 2026
“>
மேலும் தவறும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ள இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
