ரோட்டோர டபா உணவகம் ஒன்றில், கடுமையான வேலைப்பளு காரணமாகப் பிஞ்சுப் பருவத்தில் அதிக உழைப்பால் சோர்ந்து போன சிறுவன் ஒருவன், சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருக்கும் போதே அப்படியே தூங்கி விழும் நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையத்தையும் கலங்க வைத்துள்ளது.
ஸ்ரீசத்யா என்ற எக்ஸ் பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சியான வீடியோவில், பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் ஒரு சிறுவன், ஓயாத உழைப்பால் ஏற்பட்ட அதீத சோர்வினால் சப்பாத்தி கட்டையை கையில் பிடித்தபடியே அப்படியே தூங்கி விழுவது அப்பட்டமாகப் பதிவாகியுள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் “படிக்கும் வயதில் இந்தக் குழந்தைக்கு இப்படியொரு கொடுமையா? இதைப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது” என சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்து வருகின்றனர்.
A kid fell asleep while making rotis at a roadside dhaba, exhausted from being overworked…🥺🥺 pic.twitter.com/k5IMntr8O4
— SriSathya (@sathyashrii) June 27, 2026
“>
குழந்தை தொழிலாளர் முறையின் கொடூர முகத்தையும், வறுமையின் கோரப் பிடியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள இந்தத் திடுக்கிடும் காட்சி, தற்போது சோசியல் மீடியாவில் பரவி பார்ப்பவர் அனைவரின் இதயத்தையும் உலுக்கி வருகிறது.
