ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் பஞ்சசீல் காலனி பகுதியில், 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் அவரது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரது கணவர் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த சந்தேகத்தின் காரணமாக, அவர் தினமும் வேலைக்குச் செல்லும்போது தனது மனைவியைத் வீட்டை விட்டு வெளியேற விடாமல், தினமும் சுமார் 10 மணி நேரம் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த சந்தேகத்தின் உச்சக்கட்டமாக அவர் தனது கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு பெண்ணின் நடத்தை மீது கொண்ட கண்மூடித்தனமான சந்தேகத்தால், கர்ப்பிணி என்றும் பாராமல் நிகழ்ந்துள்ள இந்த கொடூரக் கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.