தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். குறிப்பாக காங்கிரஸ், இந்திய ஜனநாயக முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் விசிக மட்டும் என்னும் கூட்டணி நிலைப்பாடை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் MLA வன்னியரசு அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவின் போது திமுக எம்பி ஆ. ராசா தயவுசெய்து கூட்டணியே வேண்டாம். நம் கட்சியை தற்காத்துக் கொள்ள கொள்கைகளை காப்பாற்ற கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட வேண்டும் எனவும் கூட்டணி வேண்டாம் என்று அறிவியுங்கள் எனவும் ஸ்டாலினிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தற்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கருத்து கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, திமுகவால் கூட்டணி அமைக்காமல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விருப்பப்பட்டால் அது அவர்களின் உட்கட்சி விவகாரம் அதில் நாங்கள் தலையிட முடியாது அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தான் திமுக 60 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் கூட்டணி இல்லாமல் எதிர்காலத்தில் திமுகவால் ஆட்சியை நிலைநிறுத்துவது என்பது நிச்சயம் கடிணம் தான் என்று கூறினார்.
