இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் உலகமே மொபைல் மற்றும் இணையத்தின் பிடியில் சுருங்கிவிட்ட சூழலில், இன்னும் இன்டர்நெட் சேவையே இல்லாத ஒரு விசித்திர நாடு உலக வரைபடத்தில் உலா வரும் தகவல் இணையதளங்களில் செம ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ‘எரித்திரியா’ (Eritrea) என்ற நாடே இந்த அதிர்ச்சியூட்டும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் உள்ள அரசின் கடுமையான கொள்கைகள் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் விதிக்கப்பட்டுள்ள ஏகப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக, அங்கு பொதுமக்களுக்கு முறையான இணைய சேவை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

ஒருவேளை அங்கு வாழும் மக்களுக்கு அவசரமாக இன்டர்நெட் சேவை தேவைப்படும் பட்சத்தில், அவர்கள் அரசின் மிகக் கடுமையான கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் ஒரு சில குறிப்பிட்ட இன்டர்நெட் சென்டர்களை (Internet Centers) மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகமே செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிவேக தொழில்நுட்பங்களை நோக்கிக் ஓடிக்கொண்டிருக்கும் இந்த 2026-ஆம் ஆண்டிலும், நெட்டிசன்களின் கற்பனைக்குக் கூட எட்டாத வகையில் இணைய வசதியே இல்லாமல் ஒரு நாடு இயங்கி வரும் இந்த செய்தி சோசியல் மீடியாவில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.